சுட்டு போட்டாலும் தமிழ் வராமல் தவிக்கும் பப்ளி நடிகை!!

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:56 IST)
தளபதியின் ஆயுத படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக தமிழுக்கு அறிமுகமான பப்ளி நடிகை, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.


 
 
ஆனால், அந்த ரவுண்ட் பாதியிலேயே நின்றுபோனது. தற்போது நடிகையின் கையில், நடன இயக்குனருடன் நடிக்கும் ஒரு படம் மட்டும்தான் உள்ளது.
 
மேலும், மலையாள சினிமா பக்கமும் நடிகை தலைகாட்ட முடிவு செய்துள்ளார். ஆனால், தமிழில் விட்ட இடத்தை பிடித்தே தீர வேண்டும் என முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம்.
 
இனி தமிழில் நடிக்க, தமிழ் அவசியம் என்று தமிழை கற்றே தீருவேன் என்று முயற்சித்து வருகிறார். ஆனால் இன்று வரை நடிகைக்கு தமிழ் வந்த பாடில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்