எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகாத வெள்ளிக்கிழமை!

சனி, 19 ஆகஸ்ட் 2017 (11:35 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்டு 24 அன்று வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின்  தாக்கம் தமிழ் சினிமாவில் அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று எந்த ஒரு புதுத் தமிழ் படமும் வெளியாகவில்லை.

 
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில், இந்த வெள்ளிக்கிழமையை போல் ஒரு நிலைமையைச் சந்தித்ததில்லை. அடுத்த வாரம்  விவேகம் படத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் இன்று புதுப்படங்கள் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2, ராம் இயக்கிய தரமணி போன்ற ரசிகர்கல்  மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாலும், நேற்று புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
விவேகம் படம் வெளியான பிறகு செப்டம்பர் மாதம் பல பெரிய படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்