ஜிடிவியில் இருந்து சன் டிவிக்கு மாறியது எப்படி? புரியாத 'மெர்சல்' புதிர்

சனி, 19 ஆகஸ்ட் 2017 (06:50 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது இந்த இசை வெளியீட்டு விழா முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும், இதற்காக ஜிதமிழ் தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் கடந்த வாரம் செய்திகள் வெளிவந்தன.



 
 
இந்த நிலையில் இந்த விழா திடீரென சன் டிவிக்கு கைமாறிவிட்டதாக தெரிகிறது. ஒருசிலர் இரண்டு டிவிகளிலும் ஒளிபரப்பாகும் என்று கூறி வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள விளம்பரத்தில் சன் டிவியில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது
 
ஒரே வாரத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை ஜீதமிழ் தொலைக்காட்சியில் இருந்து சன் டிவிக்கு மாறியது எப்படி? என்று படக்குழுவினர் பலருக்கே புரியாத மர்மமாக உள்ளது. ஆனால் ரசிகர்களை பொருத்தவரையில் எந்த டிவியில் ஒளிபரப்பினால் என்ன, ஏதாவது ஒரு டிவியில் டெலிகாஸ்ட் செய்தால் போதும் என்ற மனப்பான்மையில் தான் இருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்