எனக்கு மருத்துவருடன் திருமணம் ஆகிவிட்டது... இது இரண்டாவது கல்யாணம் - மனம் திறந்த தமன்னா!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (11:47 IST)
பளீச்சுனு மின்னும் தங்க மேனி அழகியான தமன்னா தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். முதல் படமே நல்ல அறிமுகம் என்பதால் கேடி, கல்லூரி , ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , சிறுத்தை தேவி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
தமிழ், தெலுங்கு, இந்தி , கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் தமன்னா மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியானது. 
 
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமன்னா, எனக்கு ஏற்கனவே மருத்துவர் ஒருவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள். இப்போது தொழிலதிபருடன் இரண்டாவது திருமணமா? இதெல்லாம் உண்மையில்லை வெறும் வதந்தி. எனக்கு திருணம் என்றால் நானே அறிவிப்பேன் என கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்