ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம்: டென்ஷனான பிரபல நடிகர்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (08:05 IST)
ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம்
பிரபல நடிகர் ஒருவர் தனது 6 வயது மகள் பெயரில் மர்ம நபர் ஒருவர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடங்கி உள்ளதால் கடும் அதிர்ச்சி அடைந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் 
 
பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகர் பிருத்விராஜ். மணிரத்னம் இயக்கிய ‘ராவணன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவருடைய 6 வயது மகளின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பக்கம் ஒன்று தொடங்கியுள்ளதாகவும் அந்தப் பக்கத்திற்கு ஏராளமான ஃபாலோயர்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது 
 
இதுகுறித்து தகவல் அறிந்த பிரித்திவிராஜ் தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். 6 வயது மகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி உள்ளது கண்டனம் தெரிவித்துள்ள அவர் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும் எங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அதை யாரும் பாலோ செய்ய வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
மேலும் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள் என்றும் 6 சிறுமிக்கு எதற்கு இன்ஸ்டாகிராம் பக்கம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற மோசமான செயல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
நடிகர் ஒருவரின் 6 வயது மகள் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்