மகளுக்கு பிறந்த குட்டி தேவதை... தாத்தா ஆனார் நடிகர் விக்ரம்!!

செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:48 IST)
நடிகர் விக்ரமுக்கு 54 வயது ஆகிய போதிலும் இன்னும் அவர் இளைஞர்போல் இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து, டூயட் பாடி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது விக்ரம் தாத்தா ஆன செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

விக்ரமின் மகளாக அக்‌ஷிதாவுக்கும், மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அக்‌ஷிதாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்து விக்ரம் தாத்தா ஆகியுள்ளார்.

இந்த செய்தி விக்ரம் குடும்பத்தாரை மட்டும் மட்டுல்லாது ஒட்டுமொத்த ரசிகர்ளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு திரைபிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்