ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகிறதா? உடனே இதை செய்யுங்கள்!

செவ்வாய், 21 நவம்பர் 2023 (09:15 IST)
பலரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில் பல சமயம் ஸ்மார்ட்போன்கள் அதிக சூடாவதும் அதனால் சில பாதிப்புகள் ஏற்படுவதும் நடக்கிறது. ஸ்மார்ட்போன்களை சூடாகாமல் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என பார்ப்போம்.



ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் சூரிய ஒளி படும் இடங்களில் வைக்காமல் இருப்பது நல்லது.

ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் சூடாகும். அதனால் பயன்பாட்டிற்கு இடையே ஃபோனுக்கு சிறிது ஓய்வு கொடுக்கலாம்.

அதிகமான அப்ளிகேசன்களை ஒரே நேரத்தில் பயன்பாட்டில் வைத்திருப்பதை தவிர்த்து தேவையான அப்ளிகேசன்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதிக செயல்பாடு கொண்ட அப்ளிகேசன்களை பயன்படுத்தும்போது பேட்டரி வேகமாக சார்ஜ் தீர்வதும், போன் வேகமாக சூடாவதும் நிகழும். அதனால் செயலிகளை பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.

ஸ்மார்ட்போன் அதிக சூடானால் அதை கவரில் இருந்து எடுத்து நிழலான இடத்தில் சிறிது நேரம் வைக்க வேண்டும்.

பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும்போதும் ஸ்மார்ட்போன் சூடாகும். எனவே பேட்டரி சேவர் மோட்-ஐ பயன்பாடு இல்லாத நேரங்களில் ஆன் செய்வது நல்லது.

தரமற்ற லோக்கல் பேட்டரிகள் பயன்படுத்துவதால் ஸ்மார்ட்போன்கள் சூடாகலாம். அதனால் தரமான பேட்டரிகளை பயன்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போனில் மால்வேர் போன்ற வைரஸ்கள் இருந்தால் சூடாக வாய்ப்புண்டு. அதனால் தேவையற்ற ஆப்களை நிறுவாமல் இருப்பது நல்லது. முடிந்தளவு மூன்றாம் தர செயலிகளை டவுன்லோட் செய்யாமல் ப்ளேஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மொபைல் வைஃபை, ஹாட்ஸ்பாட்டை அதிக நேரம் ஆன் செய்து வைத்திருந்தாலும் சில சமயம் ஃபோன் ஹீட் ஆகலாம். இவ்வாறு அடிக்கடி ஃபோன் அதிக ஹீட் ஆனால் ஸ்மார்ட்போனில் ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட சில சேவைகள் முழுவதுமாக ஒர்க் ஆகாமல் போய்விட வாய்ப்புள்ளது. அதுபோல ஃபோனை நீண்ட சார்ஜ் போடுவது அல்லது பாதி சதவீதத்திற்கு மேல் சார்ஜ் இருந்தாலும் மீண்டும் மீண்டும் சார்ஜ் போட்டு ஃபுல் செய்வது போன்றவையும் பேட்டரி லைஃபை பாதிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது.

Edit by Prasanth.K
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்