90ஸ் கிட்ஸின் விருப்பமான Omegle நிறுவனத்திற்கு மூடுவிழா!

வியாழன், 9 நவம்பர் 2023 (15:13 IST)
90ஸ் கிட்ஸ் இடையே பிரவுசிங் செண்டர் காலத்தில் இருந்தே பிரபலமாக இருந்து வந்த Omegle செயலி நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட்போனிலேயே வாட்ஸப் உள்ளிட்ட பல செயலிகள் மூலம் வீடியோக்காலில் எளிதாக பேச முடிகிறது. ஆனால் 2000களின் தொடக்க காலத்தில் வீடியோ கால் பேச வேண்டுமென்றால் கணினி, வெப் கேமரா, இணைய வசதி அனைத்தும் தேவை. இவ்வளவு இருந்தாலும் வீடியோகால் பேசும் வசதிக் கொண்ட ஒரு தளம் தேவை. அப்படியாக 90ஸ் கிட்ஸ் இடையே 2000களில் பிரபலமாக இருந்த தளம்தான் Omegle.

2009ல் தொடங்கப்பட்ட இந்த ஒமெகில் தளத்தின் மூலம் அதில் கணக்கு வைத்துள்ள உலகம் முழுவதும் உள்ள பல நபர்களோடு நட்பு கொள்ளவும், சாட் செய்யவும், வீடியோ கால் செய்யவும் முடியும் என்பதால் அப்போதைய இளைஞர்களிடையே பெரும் ட்ரெண்டில் இது இருந்தது. ஆனால் தற்போதைய ஸ்மார்ட் யுகத்தில் பல்வேறு செயலிகள் வருகையால் Omegle பயன்பாடு குறைந்து காணாமலே போய்விட்டது.

இந்நிலையில்தான் ஒமெகில் நிறுவனத்தை மூடுவதாக அதன் நிறுவனர் லிஃப் கே ப்ரூஸ் அறிவித்துள்ளார். 90களில் புழக்கத்தில் இருந்த பல விஷயங்களும் மெல்ல மறைந்து வரும் நிலையில் இனி ஒமெகிலும் நம் நினைவில் மட்டுமே இருக்கும்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்