மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவிலேயே அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பல கிளைகளை கொண்ட வங்கி ஆகும். இதில் தற்போது வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்கான ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்காக 8,424 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இட ஒதுக்கீட்டின்படி எஸ்.சி பிரிவினருக்கு 1,284 பணியிடங்கள், எஸ்.டி பிரிவினருக்கு 748 பணியிடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 1919 பணியிடங்கள், ஈ.டபிள்யூ.எஸ் பிரிவினருக்கு 817 பணியிடங்கள், பொதுப்பிரிவில் 3,515 பணியிடங்கள் என மொத்தம் 8,424 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது.இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம்.