உலகின் முதல் ‘1 TB’ மெமரி கார்டு – விலை எவ்வளவு தெரியுமா ?

Webdunia
சனி, 18 மே 2019 (12:10 IST)
உலகிலேயே முதன் முதலாக 1டிபி மெமரி கார்டுகளை சாண்டிஸ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபைல் போன்களில் இன்பில்ட் மெமரி போதாத காரணத்தால் எக்ஸ்டர்னல் மெமரி கார்டுகளையும் பொறுத்திக் கொள்ளும் வகையில் ஸ்மார்ட் போன்கல் தயாரிக்கப்படுகின்றன. மொபைல் போன்களில் இப்போது அதிகளவில் ஆப்கள், வீடியோக்கள் மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை இன்ஸ்டால் செய்து அதிகளவில் இளைஞர்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இதனால் அவகளுக்கு அதிகப்படியான மெமரி தேவைப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய சாண்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1டிபி மெமரி கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் மட்டும் இணையதளங்களில் இந்த கார்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் 31000 ரூபாய் என சொல்லப்படுகிறது. விரைவில் இந்தியாவிற்கும் இந்த கார்டுகள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்