ஷாவ்மி நிறுவன தயாரிப்புகளான ரெட்மி, ஜியோமி, போக்கோ மாடல் ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து மக்களிடையே பயன்பாட்டில் உள்ள நிலையில் சில மாடல்களுக்கு இனி அப்டேட் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்த விலையில் பல சிறப்பம்சங்களுடன் ஷாவ்மி நிறுவனத்தின் Redmi, Xiaomi, Poco விற்பனையாகி வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பொதுவாக எம்.ஐ.யூ.ஐ (MIUI) என்ற இயங்குதளமே பயன்படுத்தப்படுகிறது.
இதுவரை MIUI 13 வரை அப்டேட்டுகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி MIUI 14 அப்டேட்டை வெளியிட உள்ளனர். முந்தைய UI-களை விட கூடுதல் சிறப்பம்சங்கள், எளிமையான பயன்பாட்டுக்கான கேட்ஜெட்டுகளோடு இது வெளியாக உள்ளது. ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் Redmi, Xiaomi, Poco ஸ்மார்ட்போன்களின் சில மாடல்களுக்கு இனி அப்டேட் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்டேட் நிறுத்தப்பட்ட மாடல்களின் விவரங்கள்:
Mi – 9, 9 SE, 9 Lite, 9 Pro, 9T, 9T Pro, CC9, CC9 Meitu
Redmi – K20, K20 Pro, K20 Pro Premium
Redmi - Note 8, Note 8T, Note 8 Pro
Redmi – 9, 9A, 9AT, 9i, 9C
Redmi - K30, 10A
Xiaomi – Mi 10 Lite
POCO – C3, C31, C40, C40+, X2
மேற்கண்ட இந்த மாடல்களின் கடைசி இயங்குதளமே ஆண்ட்ராய்டு 11 வரைதான் என்பதால் அதில் இந்த புதிய MIUI 14 சரியாக செயல்படாது என்பதால் புதிய சிறப்பம்சங்களை அதில் பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.