ஐக்கூ நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேமிங் சிறப்பம்சங்களுடன் கூடிய iQOO Neo 7 Pro 5G வெளியாகியுள்ளது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விற்பனை வேகமெடுத்து வருகிறது. கேமிங், கேமரா, ப்ராஸசர் என பலவிதமான பயன்பாடுகளுக்கும் ஏற்ற சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது ஐக்கூவின் iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. கேமிங் பிரியர்களுக்காகவே Independent Gaming Chip தொழில்நுட்ப வசதி இதில் உள்ளது.
இந்த iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனின் மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது. FM Radio, 3.5 mm Headphone Jack உள்ளிட்டவையும் கிடையாது.
இந்த iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் டார்க் ஸ்டோர்ம், ஃபியர்லஸ் ஃப்ளேம் ஆகிய இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது. iQOO Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலின் விலை ரூ.37,999 ஆகவும் விற்பனையாகி வருகிறது.