இந்தியாவில் பிரபலமான ஜியோ நிறுவனம் தனது புதிய மிகவும் விலைக் குறைவான பட்டன் 4ஜி போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு முன்னணி நிறுவனமாக கால் பதித்துள்ளது ஜியோ நிறுவனம். நாடு முழுவதும் தற்போது 5ஜி சேவைகளை வேகமாக அனைத்து நகரங்களிலும் ஏற்படுத்தி வருகிறது ஜியோ.
முன்னதாக சில ஆண்டுகள் முன்பு குறைவான இணைய வேகத்தில் செயல்படும் பட்டன் ஃபோனை ரூ.1500க்கு ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. சிறிய ஃபோனாக இருந்தாலும் அதில் படம் பார்ப்பது, கேமரா, பாடல் கேட்பது என அனைத்து சிறப்பம்சங்களும் இருந்ததால் சாமானிய மக்கள் பலரையும் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது அதிவேக 4ஜி இணைய வேகத்துடன் கூடிய பட்டன் ஃபோனான Jio Bharat V1 4G ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மிக மிக குறைந்த விலையில் ரூ.999-க்கு அறிமுகமாகியுள்ள இந்த ஜியோ பாரத் ஃபோனில் ஸ்மார்ட்போனில் உள்ளது போல பல சிறப்பம்சங்கள் உள்ளன.
Jio Bharat V1 4G ஃபோன் சிறப்பம்சங்கள்:
1.77 இன்ச், QVGA ஸ்க்ரீன்
2 எம்.பி பின்பக்க ப்ரைமரி கேமரா
0.3 எம்.பி முன்பக்க கேமரா
512 எம்.பி ரேம், 4 ஜிபி இண்டெர்னல் மெமரி
128 ஜிபி வரை சப்போர்ட் செய்யும் மெமரி கார்ட் ஸ்லாட்
4G, ப்ளூடூத், மைக்ரோ யூஎஸ்பி 2.0 போர்ட்
3500 mAh பேட்டரி.
இவ்வளவு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த Jio Bharat V1 4G ஃபோனில் ஒரு சிம் கார்ட் ஸ்லாட் மட்டுமே உள்ளது. அதிலும் ஜியோ சிம் மட்டும்தான் சப்போர்ட் ஆகும். அதுபோல இந்த ஃபோனில் வீடியோ ரெக்கார்டிங் வசதி இல்லை.
இந்த ஜியோ பாரத் ஃபோன்களுக்கு ஸ்பெஷல் ரீசார்ஜ் பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு 500 எம்.பி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் கொண்ட பேக் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.123 க்கு கிடைக்கிறது.
வருடம் முழுவதும் வேலிடிட்டி கொண்ட பேக் ரூ.1234க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேக்கில் தினசரி 500 எம்.பி டேட்டா, அன்லிமிட்டெட் கால்கள் செய்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டை விரும்பாத, எளிய சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் உத்தரவாதமான சிறப்பம்சங்களை வழங்குகிறது Jio Bharat V1 4G பட்டன் ஃபோன்கள்.