பிரபல விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய iQOO 12 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது மற்றொரு ப்ராண்டான ஐக்கூ மூலமாகவும் பல ஸ்டைலிஷ் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வாறாக தற்போது 5ஜி அலைவரிசை கொண்ட புதிய iQOO 12 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த iQOO 12 ஸ்மார்ட்போன் லெஜெண்ட் வொயிட், ஆல்பா ப்ளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. நாளை வெளியாகும் இதன் விலை ரூ.50,000 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.