இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்று ஒன்ப்ளஸ். அதிநவீன கேமராக்கள், தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் கொண்ட பல ஸ்மார்ட்போன் மாடல்களை இதுவரை ஒன்ப்ளஸ் வெளியிட்டுள்ளது. தற்போது சாம்சங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் மடிக்கக்கூடிய Foldable Smartphone-களை சந்தையில் இறக்கி வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஒன்ப்ளஸும் தனது புதிய OnePlus Open மாடலை அறிமுகம் செய்துள்ளது.
OnePlus Open ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
-
7.8 இன்ச் உள் அமொலெட் டிஸ்ப்ளே
-
3.31 இன்ச் வெளி அமொலெட் டிஸ்ப்ளே
-
ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2
-
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
-
48 எம்பி + 48 எம்பி + 64 எம்பி ப்ரைமரி ட்ரிப்பிள் கேமரா
-
32 எம்பி + 20 எம்பி முன்பக்க டூவல் கேமரா
-
4800 mAh பேட்டரி, 67 W பாஸ்ட் சார்ஜிங்
இந்த OnePlus Open ஸ்மார்ட்போனின் விலை மற்ற நாட்டு விலை நிலவரங்களோடு ஒப்பிடும்போது ரூ.1,39,999 இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஆப்பிள் ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு இணையான விலை என்பது குறிப்பிடத்தக்கது.