விரைவில் 5ஜி...இந்தியாவின் வளர்ச்சி அதிவேகத்தில் இருக்கும் - முகேஷ் அம்பானி ஆருடம்

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:23 IST)
உலக அளவில் முதல்  பத்து  மிகப்பணக்காரர்களின் பட்டியலில் 8 ஆம் இடத்தில் இருந்த ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி நேற்று தன் முதலீட்டுப் பங்குகளின் விலை உயர்ந்ததை அடுத்து அவர் உலகின் 6 வது பெரும் பணக்காரர் என் சிறப்பை அடைந்தார்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுகூட்டம் முதன்முதலாக மெய்நிகர் தொழில் நுட்பத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு பேசிய ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஎஷ் அம்பானி  கொரொனா காலத்திற்குப் பின் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகத்தில் இருக்கும்  என்று ஆருடம் சூட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது : 

இதற்கு முன்னர் உலகையே ஒரு வலைக்குள் கொண்டு வந்த கூகுள் இணையதளம் ரூ. 33,737 கோடி  முதலீடு செய்துள்ளது.

இதற்கடுத்து, ஜியோவின் 5 ஜி தொழில்நுட்ப சேவை விரைவில் தொடங்கும் என தெரிவித்தார் மேலும், இந்த 5 ஜி தொழில்நுட்பம் உலக அளவில் இருக்கும் எனறும் மற்ற தொழில்நுட்பங்களுக்கும் ஜியோ இயங்குதளம்  நிலைநிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் எதிர்பார்ப்பான 5ஜி தொழில்நுட்பத்தை முகேஷ் அம்பானி கூறியுள்ளது இன்று  இளைஞர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்