சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவிவரும் இந்தத் தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த தொற்றைத் தடுக்க அரசு வரும் ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுதாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் , உலக நாடுகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் உலகநாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பாமல் போகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.