ப்ளே ஸ்டோரில் 151 போலி செயலிகள் நீக்கம்! – கூகிள் நிறுவனம் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (15:28 IST)
கூகிள் ப்ளே ஸ்டோரில் போலியாக செயல்பட்டு வந்த எஸ்.எம்.எஸ் செயலிகள் பல நீக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப வளர்சியால் பலரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் ஸ்மார்ட் போனில் முக்கியமான இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருந்து வருகிறது. இந்த ஆண்ட்ராய்டு தளத்தில் செயல்பட கூடிய செயலிகள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இந்நிலையில் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை அடிக்கடி சோதனைக்குட்படுத்தி அவற்றை நீக்கும் வேலையையும் கூகிள் செய்து வருகிறது.

இந்நிலையில் கூகிள் ப்ளே ஸ்டோரில் போலியாக செயல்பட்டு வந்த 151 எஸ்.எம்.எஸ் செயலிகளை கூகிள் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த செயலிகளை 10.5 பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்