இனி போலி கணக்குகளுக்கு ஆப்பு; அசத்தும் ஃபேஸ்புக்கின் புதிய வசதி

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (14:00 IST)
ஃபேஸ்புக்கில் பெரும் தலைவலியாக இருக்கும் போலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்க ஃபேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

 
சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் புதிய கணக்கு தொடங்கி பயன்படுத்தலாம். இதனால் பல போலி கணக்குகள் உள்ளது. இந்த போலி கணக்குகள் சமூகத்தில் பல பிரச்சனைகளுக்கு காரணமாய் உள்ளது.
 
போலி கணக்குகள் பெரும்பாலும் பயன்படுத்துவோரின் புகைப்படம் இருப்பதில்லை. ஃபேஸ்புக் நிறுவனமும் பல காலமாக இந்த போலி கணக்குகளை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் புகைப்படம் மூலம் போலி கணக்குகளை எளிதாக கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
 
நாம் புகைப்படத்தை அப்லோட் செய்தால் புகைப்படத்தில் இருக்கும் நபரை டேக் செய்யும் வசதி உள்ளது. இதன்மூலம் அவர்களை அடையாளம் காண முடியும். இந்த வசதி ஏற்கனவே ஃபேஸ்புக்கில் உள்ளது. இதிலிருந்து சற்று மேம்படுத்தப்பட்டு முகத்தை ஆராயும் அமைப்பு செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
வேறொருவரின் புகைப்படங்களை கணக்குகளில் பயன்படுத்தும்போது, ஏற்கனவே இருக்கும் தகவல்களோடு அதை ஒப்பிட்டுப் பார்த்து அந்த புகைப்படம் குறித்த அடையாளம் காண முடியும். புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தும் பட்சத்தில் புகார் அளித்தால் அது நீக்கப்படும். இதன்மூலம் எளிதாக போலி கணக்குகளை தடுக்க முடியும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்