அஜித் மகள் அனோஷ்காவை ஜெயலலிதாவாக மாற்றிய ரசிகர்கள்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (13:54 IST)
நடிகர் அஜித்குமாரின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள் இன்று. இதனையொட்டி மதுரையை சேர்ந்த அவரது ரசிகர்கள் சிலர் ஒட்டியுள்ள போஸ்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அனோஷ்காவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மதுரை முழுவதும் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் அஜித்தின் ரசிகர்கள். அதில் போஸ்டரில் அனோஷ்காவை ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.
 
அதில் ஜனவரி 03-இல் பிறந்த நாள் காணும் எதிர்கால தங்க தாரகையே வாழ்க பல்லாண்டு என குறிப்பிட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள். மேலும் அனோஷ்காவின் பிறந்தநாளை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #HBDPrincessAnoushkaAjith என்ற ஹேஷ் டேக் உருவாக்கி அதனை இந்தியா முழுவதும் டிரண்ட் ஆக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்