iPhone விற்பனையை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு! – அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (14:38 IST)
உலகம் முழுவதும் பிரபலமான ஐஃபோன்களை விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் தனது பழைய மாடல் ஐஃபோன்களின் விற்பனையை நிறுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் ஏராளமான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஏராளமான் மாடல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. குறைந்த விலை முதல் அதிக விலை வரை பல மாடல்களில் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் ஆப்பிள் ஐஃபோன் கொடுக்கும் மொஸ்தருக்கு அது இணையாகாது என்பது ஐஃபோன் பயனாளர்களின் கருத்து.

அதற்கேற்றார்போல் ஐஃபோன் மாடல்கள் ஆண்டுக்கு ஆண்டு அப்டேட்டாகி வருகின்றன. விலையும் அதிகம். ஆனாலும் ஐஃபோன் மீதான மோகம் பலருக்கு குறைவதில்லை. அதனால் பலர் ஐஃபோனின் புதிய மாடல் வரும்போது விலை குறையும் பழைய மாடல்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செகண்ட் ஹேண்ட், பழைய மாடல் ஐஃபோன்களை வாங்குவோருக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட உள்ளது ஆப்பிள் நிறுவனம். விரைவில் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் 15 வெளியாக உள்ளது. அது வெளியான பின்பு இதற்கு முந்தைய மாடல்களான ஐபோன் 12, 13 மினி, ஐஃபோன் 14 ப்ரோ  மற்றும் 14 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களின் விற்பனையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் ஐஃபோன் 14 மற்றும் 14 ப்ளஸ் ஆகிய இரு மாடல்கள் மட்டும் விலை குறைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய மாடல் வந்தால் பழைய மாடல் விலை குறையும் என பலரும் காத்திருக்கும் நிலையில் பழைய மாடல்களின் விற்பனை நிறுத்தப்படலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்