தமிழ்நாட்டு சிங்கமாக மாறியவுடன் தமிழில் டுவீட் செய்த ஹர்பஜன் சிங்

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (15:30 IST)
ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ள நிலையில் இதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஹர்பஜன் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

 
11வது ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். அணிக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
 
ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அஸ்வினை தற்போது கிங்ஸ் XI பஞ்சாப் அணி ரூ.7.60 கோடி வாங்கியது. 
 
மும்பை அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங்கை தற்போது சென்னை சூப்பர் கிக்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் ஹர்பான் சிங் தனது மகிழ்ச்சியை தமிழில் டுவீட் செய்து வெளிப்படுத்தினார்.
 
வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுனு என்று ஹர்பஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்