ரெய்னா 50வது அரைசதம்: டெல்லிக்கு 180 ரன்கள் இலக்கு

Webdunia
புதன், 1 மே 2019 (21:40 IST)
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 50வது லீக் போட்டியில் சென்னை அணியின் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனது 50வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
 
டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ஆரம்பத்தில் ரன் எடுக்க திணறினாலும், டிபிளஸ்சிஸ், ரெய்னா, ஜடேஜா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை விளையாடியதால் சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. சுரேஷ் ரெய்னா 59 ரன்களும், டிபிளஸ்சிஸ் 39 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், தோனி 44 ரன்களும் எடுத்தனர்.
 
டெல்லி அணியில் பந்து வீச்சாளர்களான சுஜித் 2 விக்கெட்டுக்களையும், மோரீஸ் மற்றும் அக்சார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி  180 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்யவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்