சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 44வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் மும்பை பேட்டிங் செய்தது
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்து 48 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார். இந்த ஐபிஎல் தொடரில் ரோஹித் அடித்த முதல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித்தை அடுத்து லீவீஸ் 32 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 23 ரன்களும் எடுத்ததால் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது
சென்னை அணியின் சாண்ட்னர் இரண்டு விக்கெட்டுக்களையும் தீபக் சஹார், இம்ரான் தாஹிர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்னும் சில நிமிடங்களில் 156 என்ற இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.
தல தோனி இன்று விளையாடவில்லை என்றாலும், வாட்சன், முரளி விஜய், ரெய்னா, ராயுடு, ஜாதவ், ஷோரே, பிராவோ, சாண்ட்னர், ஹர்பஜன் என நீண்ட பேட்டிங் வரிசையை சென்னை அணி பெற்றுள்ளதால் இந்த இலக்கை எளிதில் எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது