16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமல்ல: சட்டத்திருத்தம் செய்ய நீதிமன்றம் ஆலோசனை

வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:05 IST)
ஒருவர் 16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் குற்றமல்ல என்று வழிவகை செய்யும் சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
நாமக்கல் பகுதியை சேர்ந்த சபரிநாதன் என்பவர் தன்மீது விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிபதி பார்த்திபன் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் ஒருவர் 16 வயதுக்கு மேல் விருப்பத்துடன் பாலுறவு கொண்டால் அது குற்றமாக கருதாத வகையில் போக்ஸோ சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசிற்கு அவர் ஆலோனை வழங்கியுள்ளார்.
 
மேலும்  திரையரங்குகளில் திரைப்படம் திரையிடும் முன் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடலுக்கு  கேடு  என்று விளம்பரம் செய்வது போல் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் போக்ஸோ சட்டத்தால் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கும் ஒரு கார்டையும் காண்பிக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்