ஐபிஎல்10 - மும்பை பந்துவீச்சில் சிதறிய கொல்கத்தா

Webdunia
வெள்ளி, 19 மே 2017 (21:45 IST)
ஐபிஎல் 2017 2வது தகுதிப் போட்டியில் கொல்கத்தா அணி மும்பை அணி பந்துவீச்சில் 107 ரன்களின் சுருண்டது.


 

 
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை ஆகிய அணிகள் விளையாடு வருகின்றனர். 2வது போட்டியில் வெற்றிப்பெறும் அணி இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதி பெறும். ஏற்கனவே புனே அணி மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டது. 
 
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துஇ வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5வது இணைந்த சூர்யகுமார், ஜக்கி கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது.
 
இருந்து நிலைக்கவில்லை 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 107 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. மும்பை அணிக்கு எளிதான இலக்கு என்பதால் எளிதில் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது.  மும்பை அணி சார்பில் கரண் சர்மா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
 
இதையடுத்து மும்பை அணி 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.
அடுத்த கட்டுரையில்