10-வது ஐபில் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே புனே அணி நுழைந்துவிட்டது. இந்நிலையில் மற்றொரு அணி எந்த அணி என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
மும்பை, புனே, ஐதராபாத், கொல்கத்தா அணிகள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே ஆஃப் விதிப்படி முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை அணியும், புனே அணியும் குவாலிஃபயர் ஒன்றில் மோதின. அதில் புனே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து அடுத்த இரண்டு இடத்தில் இருந்த ஐதராபாத், கொல்கத்தா அணிகள் எலிமினேட்டர் என்னும் வெளியேற்றும் போட்டியில் மோதின. இந்த போட்டியில் கொல்கத்த வெற்றி பெற்றது.
இதனால் ஐபிஎல் பிளே ஆஃப் விதிப்படி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தாவுக்கும், குவாலிஃபயர் ஒன்றில் தோல்வியடைந்த மும்பை அணிக்கும் இடையே இன்று குவாலிஃபயர் இரண்டாவது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் புனே அணியை சந்திக்க உள்ளது.