ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணி நட்சத்திர வீரர் திடீர் விலகல்

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (18:32 IST)
ஐபிஎல் கிரிக்கெட் 10வது சீசன் தொடரில் டெல்லி டேர்டெலில்ஸ் அணியில் விளையாட இருந்த தென் ஆப்ரிக்க வீரர் டுமினி திடீரென விலகுவதாக அறிவித்தார்.



 

 
ஐபிஎல் 10வது சீசன் தொடர் வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இந்த தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்க அணி வீரர் ஜேபி டுமினி இடம்பிடித்திருந்தார். 
 
இந்நிலையில் திடீரென ஐபிஎல் போட்டியில் இருந்து விலக்குவதாக கடந்த 21ஆம் தேதி அறிவித்தார். இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியவர். 2016 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். தற்போது இவரின் இந்த முடிவால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
மேலும், இவர் தற்போது நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.
அடுத்த கட்டுரையில்