கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அவரால் அவருடைய முந்தைய ரன் மெஷின் வேகத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் அவர் தன்னுடைய உச்சத்தைத் தொட்டு கீழிறங்க தொடங்கிவிட்டார் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. ஆனாலும் அவர் இடையிடையே சில நல்ல இன்னிங்ஸ்களையும் ஆடி வருகிறார்.