இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சற்று நேரத்திலேயே மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் அந்த அணி தற்போது மிகவும் நிதானமான ஆட்டத்தை ஆடி வருகிறது. தற்பொது களத்தில் கேப்டன் ரிஸ்வான் மற்றும் சவுத் சக்கீல் ஆகியோர் ஆடி வருகின்றனர். அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 58 ரன்கள் சேர்த்துள்ளது.