கோடையை குளிர்விக்கும் சூப்பர் ரோஸ்மில்க் ஈஸியா செய்யலாம்..!

Prasanth Karthick
திங்கள், 8 ஏப்ரல் 2024 (10:53 IST)
கோடைக்காலங்களில் தாகம் தணிக்க, ஆற்றல் பெற அற்புதமான பானங்களில் ரோஸ் மில்க்கும் ஒன்று. குழந்தைகளுக்கு பிடித்த ரோஸ்மில்க்கை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.




தேவையான பொருட்கள்:
பால்,
கடல்பாசி,
ரோஸ்மில்க் எசன்ஸ்,
சர்க்கரை,


கடல்பாசியை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஜெல்லி பதத்தில் கிளறிக் கொள்ள வேண்டும்.

1 லிட்டர் பாலை எடுத்து நன்றாக காய்ச்சி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாலை எடுத்து அதில் ரோஸ் மில்க் எசன்ஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.

பின்னர் அதனுடன் தயாரித்து வைத்த கடல்பாசியை கலந்து கொண்டால் சுவையான சூப்பரான ரோஸ்மில்க் தயார்.

கடல்பாசி உடலுக்கு குளிர்ச்சி தரும், கடல்பாசி இல்லாவிட்டால் சப்ஜா விதைகளை ஊற வைத்து பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்