குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

Mahendran

வியாழன், 12 டிசம்பர் 2024 (18:45 IST)
குளிர் தாங்க முடியாமை என்பது உடலில் சில உடல்நிலை மாற்றங்களின் அறிகுறியாக இருக்க முடியும்.  அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
 
பொதுவாக, மனித உடலின் வெப்பநிலையை பல அமைப்புகள் கட்டுப்படுத்துகின்றன. மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஹைப்போதலாமஸ், கழுத்துப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிக்கு வெப்பம் குறைவதை அறிவிக்கின்றது. இதன் மூலம் தைராய்டு சுரப்பி உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றங்களை கண்காணித்து, உடலுக்கு அதிக கலோரி சக்தியை சேமிக்க வைக்குமாறு உத்தரவிடுகிறது. இந்த சேமிக்கப்பட்ட கலோரி உடலுக்கு சக்தி அளிக்கும், இதனால் உடல் சூடாகி, ரத்தம் அதை உடல் முழுவதும் பரப்பி, உடல் வெப்பத்தை காப்பாற்ற உதவுகிறது.
 
இது எல்லாம் சரியாக செயல்பட்டிருந்தால், எந்த விதமான உடல் சூடு பராமரிப்பு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால், ஒவ்வொரு அமைப்பும் சரியாக செயல்படாதபோது, உடல் வெப்பநிலையிலும் சுற்றுப்புற வெப்பநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். அதிக குளிர் உள்ள இடங்களில் உடல் நடுக்கமாய் இருக்கும் போது, அது உங்கள் உடல் வெப்பத்தை இழந்து கொண்டிருப்பது எனக் கொள்ளப்படுகிறது. அதனால் உடனே பல அடுக்கான வெப்ப உடைகளை அணிந்து, உடல் பகுதிகளை நன்கு தேய்த்து சூடேற்ற வேண்டும்.
 
குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உடலோடு உரசிக் கொள்வதும், சில நிமிடங்கள் குளிரை குறைத்து உடலை சூடாக்க உதவும். அதேசமயம், குளிரை நன்கு தாங்க முடியாவிட்டால், உங்கள் குடும்ப டாக்டரின் ஆலோசனையின் படி சில ரத்த பரிசோதனைகள் செய்து, குளிரை தாங்க முடியாத காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்