பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆலிவ் ஆயில்

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (00:13 IST)
ஆலிவ் ஆயில் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இந்த எண்ணெய் நம்முடைய உடல்நலத்திற்கும், சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் நல்ல  தீர்வாக இருக்கும்.
 
இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை காக்க மிகவும் உதவும். மேலும் இதில் உள்ள  ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரும்.
 
தினமும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயில் ஏற்படாமல் தடுக்கலாம்.ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆலிவ்களை பயன்படுத்தலாம். தூய்மையான ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும்.
 
தொடர்ச்சியாக ஆலிவ்களை எடுத்துக்கொள்ளும்போது, எலும்புகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, எலும்புகளை வலுப்படுத்த செய்யும். குடல் வீக்கம் ஏற்பட்டால்,  செரிமானத்தை பாதிக்கும். இந்தநிலையில் வயிற்று வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் செரிமானத்தை குணப்படுத்த ஆலிவ் உதவும்.
 
உடல் எடையை குறைக்க உதவும லினோலிக் அமிலம் தூண்டப்பட்டு உற்பத்தியாக வேண்டுமெனில் அதற்கு ஆலிவ்களை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த  அடிப்படையில் ஆலிவ் பயன்பாடு மற்ற உடல்நல நன்மைகளுடன் எடை இழப்பிற்கும் உதவியாக இருக்கும்.
 
ஆலிவ் ஆனது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெய் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்க  உதவுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்