பெண்கள் ஹை ஹீல்ஸ் போடுவதால் என்ன ஆகும் தெரியுமா?

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (23:57 IST)
உயரம் குறைவாக இருப்பவர்கள் மட்டுமல்ல சராசரி உயரம் இருப்பவர்கள் கூட இந்த ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிகிறார்கள். இங்கு பெண்களைத்தான் குறிப்பிடுகிறோம். ஏன்? அவர்கள்தான் ஹை ஹீல்ஸ் பிரியைகளாக இருக்கிறார்கள்.
 
ஒரு மணி நேரம் தொடர்ந்து அணிந்தால் நிரந்தரமான வலியை பெண்கள் உணரத் தொடங்கிவிடுகிறார்கள்.
 
சற்றும் பொருத்தமில்லாத வெறும் ஃபேஷனுக்காக அணியும் இத்தகைய ஹை ஹீல்ஸ் செருப்புகளால் மூட்டு அழற்சி, ஸ்ட்ரெஸ் எலும்பு முறிவுகள், இறுக்கமடையும் நரம்புகள் என்று பிரச்சனைகள் அதிகரிப்பதாக மைக் ஓ'நீல் என்ற மருத்துவர் எச்சரிக்கிறார்.
 
லண்டனில் இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற வசதியற்ற ஹை ஹீல்ஸ்களை அணிவதால் அனைத்து பெண்களும் நீக்கமற வலி உள்ளிட்ட பெரிய பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
 
முக்கால்வாசிப் பெண்கள் வெறும் பாஷனுக்காக, அது பார்க்க அழகாக இருப்பதற்காகவே இதனை அணிவதாக மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.
ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிந்த 10 நிமிடங்களிலேயே பல இடங்களில் வலி உருவாவதாக பெண்கள் பலர் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
பலர் பேஷனுக்காக வெளியில் போட்டுக் கொண்டு சென்று விட்டு பிறகு வலி தாங்க முடியாமல் வெறும் காலுடன் வீட்டுக்கு திரும்பவும் நேரிட்டுள்ளது.
 
மேலும் ஹை ஹீல்ஸ்களால் பித்தவடிகள் தோன்றுவதும் உண்டு என்கின்றனர், இந்த ஆய்வாளர்கள்.
18 வயது முதல் 24 வயது வரை உள்ள பெண்களே அதிகம் இத்தகைய ஹை ஹீல்ஸ்களை விரும்புகின்றனர். அவர்களுக்கு தங்கள் கால்கள் அழகாயில்லை, கவர்ச்சியாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மை உருவாகியுள்ளது. இதனால் ஹை ஹீல்ஸ் அணிந்தால் கால்கள் அழகாகி விட்டதாக ஒரு கற்பனை அவர்களை ஆட்கொண்டுள்ளது என்கிறார் டாக்டர் ஓ'நீல்.
 
அதுவும் நம்மூர் சாலைகள் திடீர் குண்டு குழிகளை உடையது ஹை ஹீல்ஸ் போட்டுக் கொண்டு நொடித்து விட்டால் அவ்வளவுதான் சில பலவீனமான கால்களில் நரம்பு பிசகிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.
 
பல இளம் பெண்கள் போட்டுக் கொள்ளும் ஹை ஹீல்ஸை பார்க்கும்போது 'பார்த்து செருப்புலேர்ந்து மெதுவா இறங்குங்க'ன்னு சொல்ல வேண்டும்போல்தான் இருக்கிறது.
 
ஆகவே இளம் பெண்களே ஹை ஹீல்ஸை தவிருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்