சிறுதானியங்களின் அற்புத பலன்கள்

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (23:51 IST)
சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிறுதானியங்களை நாம் உணவாக எடுத்துகொள்ளும் போது நம்  உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
 
உடல் சரியாக இயங்குவதற்கு தேவையான பல வகையான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த  ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கும் இரும்புச்சத்து மற்றும் செம்பு ஆகியவை அதிக அளவில் சிறுதானியங்களில் உள்ளன. 
 
சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. சிறுதானியங்களில் அதிக அளவு உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையைக்  குணப்படுத்தும். சிறுதானியங்களில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
 
சிறுதானியங்களில் அதிக அளவு உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையைக் குணப்படுத்தும். சிறுதானியங்களில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவடையச்  செய்கிறது.
 
சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது.
 
சிறுதானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறுதானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. சிறுதானியங்களில் மலமிளக்கி பண்புகள்  மலச்சிக்கலுக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன.
 
சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இரவில் சிறுதானியங்களை சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்