தயிரை எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

செவ்வாய், 21 ஜூன் 2022 (23:32 IST)
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிரானது புரதங்கள், கால்சியம்,  ரிபோப்லாவின், உயிர்ச்சத்து B6 மற்றும் உயிர்ச்சத்து B12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது. உடல் எடையை குறைக்க  தயிர் உதவிடும்.
 
தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில்  தயிரை உட்கொள்வது நல்லது.
 
மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.
 
ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும்.  தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம்.
 
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள  பெண்கள் இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
 
தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும்,  எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில்  தயிரை உட்கொள்வது நல்லது.
 
பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது  கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை  நீக்க இது உதவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்