சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், நம் உடலில் தேவையில்லாமல் தங்கி உள்ள கொழுப்புகளை வெளியேற்றும், குறிப்பாக வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது. இதனால் உடல் எடை குறையும்.
சோம்பு நம் உடலில் உள்ள நீர்சத்துக்களை வெளியேற்றக்கூடியது. முக்கியமாக சிறுநீர் வழியாக வெளியேற்றக்கூடியது. இதனால் சிறுநீரக பாதையில் ஏதேனும் தோற்று ஏற்பட்டிருந்தால் அல்லது சிறுநீரக கற்கள் இருத்தால் அதை கரைக்கவும், போக்கவும் சோம்பு தண்ணீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
பசியின்மை, மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சோம்பை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சொம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பிசம் ஆகியவற்றிற்கு சோம்பு நல்ல தீர்வு தரும்.