பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளி குவித்த படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகமான வருமானம் ஈட்டிய படமாக கடந்த 10 வருடங்களாக முறியடிக்க இயலா சாதனையையும் இந்த படம் பெற்றிருந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.
இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பர் 17ல் வெளியாவதாக முன்னரே அறிவித்திருந்த ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ”உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடக்கம் கண்டுள்ளன. நியூஸிலாந்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அவதார் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும் எனவும், இப்படத்தின் மூன்றாம் பாகம் 2023 ஆம் ஆண்டு, டிசம்பரில் வெளியாகும், 5 ஆம் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் ’என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.