ஆஸ்கர் நிகழ்ச்சியில் நடிகர் வில் ஸ்மித்திடம் அறை வாங்கிய கிரிஸ் ராக்கின் நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஹாலிவுட்டில் பிரபல காமெடியனாகவும், மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துபவராகவும் உள்ளவர் கிறிஸ் ராக். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவை கிரிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி குறித்து காமெடிக்காக கிரிஸ் ராக் பேசப்போக கடுப்பான வில் ஸ்மித் நேராக மேடைக்கு வந்து கிரிஸ் ராக்கை பளார் என அறைந்தார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சோசியல் மீடியாக்களில் மீம் கண்டெண்டாக மாறி ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் வில் ஸ்மித் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார். ஆனால் அந்த அறை சம்பவத்திற்கு பிறகு கிரிஸ் ராக்கின் புகழ் எகிறியுள்ளது.
அடுத்ததாக அவர் நடத்த உள்ள மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான டிக்கெட்டுகள் சுமார் ரூ.3,500 ஆக விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் சுமார் ரூ.25,000 வரை விலை உயர்ந்துள்ளது.