மீண்டும் டைனோசர் தீவுக்குள் நுழையும் புது டீம்..! இந்த தடவை வேற சம்பவம்! - Jurrasic World Rebirth தமிழ் ட்ரெய்லர்!

Prasanth Karthick
வியாழன், 6 பிப்ரவரி 2025 (10:53 IST)

உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் விரும்பப்படும் Jurrasic Franchiseல் இருந்து அடுத்ததாக Jurrasic World Rebirth திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதன் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

80ஸ், 90ஸ் கிட்ஸ் தொடங்கி இப்போதுள்ள 2கே ஆல்பா கிட்ஸ் வரை பல தலைமுறைகளையும் ஈர்க்கும் ஒரு விலங்கு டைனோசர். மனிதன் உருவாவதற்கு பல கோடி ஆண்டுகள் முன்னால் வாழ்ந்த டைனோசர்கள் குறித்து முதன்முதலில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம் உலக அளவில் பெரும் வெற்றியடைந்ததுடன், பலரை டைனோசர்களுக்கு ரசிகர்களாக்கியது

 

தொடர்ந்து 3 பாகங்கள் வெளியான பிறகு அந்த ஜுராசிக் தொடர் நின்றிருந்த நிலையில் Jurrasic World என்ற புதுப்பரிமாணத்தில் அதன் கதை தற்போது மீண்டும் தொடங்கி படங்களாக வெளியாகி வருகிறது. முன்னதாக வெளியான ஜூராசிக் வேர்ல்ட் டொமினியனை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியாக உள்ள படம்தான் Jurrasic World Rebirth.

 

மனித இனத்தின் உயிரியல்ரீதியான முன்னேற்றத்திற்கு தேவையான டிஎன்ஏ மாதிரிகளை 3 பெரிய டைனோசர் இனங்களிடம் இருந்து எடுக்க வேண்டும். அவை ஆரம்பத்தில் ஜுராசிக் பார்க் உருவாக்க ஆய்வகமாக செயல்பட்ட ஒரு தீவில் வாழ்கின்றன. அந்த தீவிற்கு டிஎன்ஏவை எடுக்க செல்லும் குழு அங்கேயெ மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த டைனோசர்களிடம் இருந்து டிஎன்ஏவை எடுத்துக் கொண்டு அங்கிருந்து உயிருடன் தப்புகிறார்கள் என்பதுதான் கதை. இதில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்திருப்பது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை அளிக்கிறது.

 

ஒவ்வொரு ஜூராசிக் வேர்ல்ட் பாகத்திலும் புதிய டைனோசர்கள் வில்லன்களான அறிமுகமாவதும், ட்ரைன்னோசாரஸ் ரெக்ஸ் (டி ரெக்ஸ்) ஹீரோ போல வந்து அவற்றை போட்டு தள்ளுவதும், ஜூராசிக் வேர்ல்ட் படத்தின் டெம்ப்ளேட்டாக இருப்பதால் இந்த பாகத்திலும் ஏதாவது ஒரு புது டைனோசர் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தமிழ் ட்ரெய்லர் இதோ…!

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்