சூரிய கிரகணத்தின்போது முக்கியமாக கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை என்ன...?

Webdunia
சூரிய கிரகண நாட்களில் செய்யக் கூடிவை மற்றும் கூடாதவை அனைத்து மக்களுக்கும் பொருந்தினாலும், கர்ப்பிணி பெண்கள் மீதான கிரகண செயல்பாடுகள் மிக முக்கியமாக பின்பற்றப்படுகிறது. இதற்கு அவர்களுள் வளரும் கருவின் உயிர் மற்றும் அதன் வளர்ச்சி முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது;

கிரகண நாட்களில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்வது கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் வானில் நடைபெறும் கிரகண நிகழ்வுகளை கர்ப்பிணிகள் தங்களின் வெற்றுக் கண்களால் பார்த்தல் ஆகாது என்றும் நம்பப்படுகிறது. இ

கர்ப்பிணிகள் வெளியில் சென்றாலோ அல்லது கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்த்தாலோ அது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் அல்லது கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சி  பாதிப்படைந்து ஊனமாக பிறக்கலாம், இல்லையேல் கருக்கலைப்பு கூட நிகழலாம் என்றும் நம்பப்படுகிறது.
 
கிரகண நேரத்தில், கர்ப்பிணிகள் சமைத்தல் கூடாது; இந்த நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது, தண்ணீர் கூட பருகாமல் இருந்தால் மிகவும் நல்லது. கிரகணம்  முடிந்த பின் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இது கர்ப்பிணிகள் அல்லாமல் அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒன்று. 
 
குளிப்பதையும் கூட கிரகணத்திற்கு பின் செய்வது நல்லது. எந்தவொரு அலுவலக அல்லது முக்கிய வேலைகளை இந்த நேரத்தில் செய்யாமல் தவிர்க்க முயலுங்கள். இந்த கருத்துக்களை கர்ப்பிணிகள் கவனத்தில் கொண்டு செயல்பட்டால், பிறக்கப்போகும் குழந்தைக்கு நல்லது.
 
வெளியில் செல்வதால், கிரகண கதிர்கள் உடலின் செயல்பாடுகளை தாக்கும் எனவே வெளியே செல்வதை தவிர்த்தல் வேண்டும். வெற்றுக்கண்களால் கிரகணத்தை  பார்த்தால், கண்கள் பாதிப்படைந்து, கண்பார்வை குறையும்; எனவே வெற்றுக் கண்களால் கிரகணத்தை பார்க்கக் கூடாது. கிரகண நேரத்தில் உண்டால், அது உடலில்  குளுக்கோஸ் அளவையும், நீர்ச்சத்தையும் குறைக்கும்; எனவே இந்த நேரத்தில் உண்ணாமல் இருப்பது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்