தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும். அனுமன் வழிபாடு எப்போதுமே காரிய ஸித்திக்குத் துணை நிற்கவல்லது என்று போற்றுகிறார்கள் பெரியோர். எந்தவொரு குழப்பமோ பயமோ இருந்தாலும் ஆஞ்சநேய பகவானைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஆத்மார்த்தமாக அவர் மேல் பக்தி செலுத்தினால், அந்தப் பக்தியால் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்கி அருள்வார் அனுமன் என்பது ஐதீகம்.
ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார்.
அந்த கொடியைப் பறித்து விட்டு, 'நல்ல செய்தி சொல்லவந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக்கிறேன்' ஏற்றுக் கொள் என்றாள். அன்னையின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.