நாடி ஜோதிடம் பற்றி அறிவோம்

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (00:19 IST)
நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியரின் வாழ்கை குறித்து எழுதி சென்ற ஓலை சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி  ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.
 
அந்த காலத்தில், சுவடிகளில் இருந்த மருத்துவக் குறிப்புகள் மற்றும் எதிர்கால குறிப்புகள் பற்றி அறிந்திடலாம். வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது. 
 
நாடி ஜோதிடம் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்தியர், கௌசிகர், வைசியர்,  போகர்பிரிகு, வசிஸ்தர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெரும்பாலான சுவடிகள் அகத்திய முனிவர் எழுதியதாகவே இருப்பதால், வாசிக்கும் போதும் அவரது பெயரை கூறி வாசிக்கின்றார்கள்.
 
ஒருவரின் கட்டை ரேகையை பதிய செய்து அதன் மூலம் அவருக்கு நாடி ஜோதிடம் பார்க்கப்படுகிறது. கைரேகையைக் கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான  விடயங்களை வாசித்து விளக்கி கூறுவதாக நம்பப்படும் ஒரு கலையாகும்.
 
நாடி ஜோதிடர்களில் சிலர் மட்டுமே ஒருவரின் எதிர்காலம் குறித்த உண்மை தகவல்களை அச்சுவடியில் கூறியுள்ளனர்.  ஒவ்வொரு ஓலையிலும் பெயர், வயது, இராசி, தாய், தந்தை பெயர், உற்றார், உறவினர், தொழில், கடந்தகாலம், எதிர்காலம் என்று அனைத்தும் கூறப்பட்டு இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்