புதுக்கோட்டை விராலிமலை முருகன்: அஷ்டமா சித்தி அளித்த தலம், சுருட்டு நைவேத்திய சிறப்பு!

Mahendran

புதன், 8 அக்டோபர் 2025 (18:15 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மலைக்கோயில் விராலிமலை முருகன் கோவில் ஆகும். இங்கு முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார். மலை உச்சியில், 207 படிகளுடன் கோயில் அமைந்துள்ளது.
 
இத்தலம் ஒரு காலத்தில் குரா மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஒரு வேடன் கண்ணில் புலியாக தோன்றி, குரா மரத்தடியில் மறைந்த முருகனின் இருப்பை மயில் மற்றும் விபூதி வாசனையால் உணர்ந்தனர் மக்கள்.
 
'விராலிமலைக்கு வா' என்று முருகன் அசரீரியாக அழைக்க, அங்கு வந்த அருணகிரிநாதருக்கு வேடன் உருவில் வந்து முருகனே வழி காட்டினார். இங்கு வழிபட்ட அருணகிரிநாதர் அஷ்டமா சித்தி பெற்று, முருகனைப் பற்றித் திருப்புகழில் 18 முறை பாடியுள்ளார்.
 
சுமார் பத்தடி உயரத்தில் ஆறுமுகங்கள் மற்றும் பன்னிரு கரங்களுடன் முருகன் காட்சியளிக்கிறார்.
 
இக்கோவிலின் தனிச்சிறப்பு, முருகனுக்குப் சுருட்டு படைக்கும் வழக்கமே. ஒரு முறை, குளிரில் நடுங்கிய பக்தர் கருப்பமுத்துவுக்கு, முருகனே சுருட்டு கொடுத்தார். ஆற்றில் இறங்கும்போது அவர் மறைந்ததை கண்டு கோவிலுக்கு சென்றபோது, முருகன் முன்பாக சுருட்டு இருப்பதை கண்டார். அன்று முதல் இந்த நைவேத்தியம் உருவானது.
 
கோவிலில் தைப்பூசம், கந்த சஷ்டி உட்பட பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்