தனக்கு தானே குழந்தை பெற்று உயிருடன் புதைத்த நர்ஸிங் மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

Siva

ஞாயிறு, 18 மே 2025 (10:53 IST)
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே, ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவி அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
 
தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்ற அவர், அதை வீட்டின் முன்வாசலில் ஒரு குழி தோண்டி புதைத்துள்ளார். அந்த வழியாக சென்ற ஒரு பெண், அந்த இடத்திலிருந்து அழுகுரல் கேட்டதையடுத்து சந்தேகத்துடன் குழியை தோண்டிப் பார்த்தார். அதில் ஒரு உயிருடன் இருந்த புதிதாக பிறந்த குழந்தை இருப்பது தெரியவந்தது.
 
அந்தப் பெண் உடனே குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். குழந்தை தற்போது சிகிச்சையில் உள்ளது.
 
இந்த சம்பவம் பற்றி புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், குழந்தையின் தாயான மாணவிக்கு காதலராக இருந்த சிலம்பரசன் என்பவர் இருந்ததாகவும் இருவரும் நெருக்கமாக பழகியதால் கர்ப்பமானதாகவும்  தெரியவந்தது. இதனையடுத்து சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
இதே வழக்கில், குழந்தையின் தாய் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சை முடிந்ததும் அவரையும் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்