வரும் திங்கட்கிழமை பெளர்ணமி.. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

Mahendran

வெள்ளி, 3 அக்டோபர் 2025 (17:59 IST)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருத்தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்குப் பின்னால் இருக்கும் மலையை 'சுற்றி' பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப் பாதையில், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுகின்றனர்.
 
அந்த வகையில், புரட்டாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை ஆலய நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
பௌர்ணமி தொடங்கும் நேரம்: வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 6) அன்று காலை 11.49 மணிக்கு பௌர்ணமி திதி தொடங்குகிறது.
 
பௌர்ணமி நிறைவடையும் நேரம்: மறுநாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) அன்று காலை 9.53 மணிக்கு பௌர்ணமி நிறைவடைகிறது.
 
எனவே, இந்த அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் பக்தர்கள் அனைவரும் திருவண்ணாமலை மலையைச் சுற்றி கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்