ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (18:10 IST)
ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி வழிபட்டால் ஏராளமான பலன்கள் உண்டு என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்

ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தி வழிபட்டால் சனி ராகு ஆகியோர்களின் இடையூறுகளில் இருந்து விடுபடலாம் என்றும் அதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடமாலையை பக்தர்கள் சாத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு வடமாலை சாத்தினால் எண்ணியது நிறைவேறும் என்றும் சனி ராகு பகவானின் இடையூறுகள் நெருங்காது என்றும் கூறப்படுகிறது.

சனி மற்றும் ராகுவால் ஏற்படும் இடையூறுகள் மனிதனை மிகப்பெரிய அளவில் ஆட்டி வைக்கும் நிலையில் அந்த நேரத்தில் நாமக்கல் சென்று ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்தினால் மனதில் நிம்மதி ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 இதனால் தான் நாமக்கல் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து வடமாலை சாத்தி வழிபட்டு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்