தெலங்கானா முதலமைச்சராக பதவி ஏற்கும் ரேவந்த் ரெட்டி! ராகுல், சோனியா பங்கேற்பு..!

வியாழன், 7 டிசம்பர் 2023 (07:43 IST)
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ரேவந்த் ரெட்டி இன்று அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர் 
 
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகரராவ் அவர்களின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. 
 
இதனை அடைத்து அம்மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது என்பதும், ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று பிரமாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். 
 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்றைய பதவியேற்பு விழாவில்  பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்