சகல சங்கடங்களையும் நீக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் !!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (11:15 IST)
சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான விரதம் ஆகும். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படவிருக்கிறது.


பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.

இந்த சதுர்த்தி திதியானது விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கடஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதமாகும்.

விநாயகரை வழிபடும் போது மோதகம், அவல்பொரி, அப்பம், அதிரசம், விளாம்பழம் போன்றவற்றை நிவேதனமாக வைத்து அருகம்புல்லைக் கொண்டு அர்ச்சனை செய்து இச்சுலோகங்களைப் பாராயணம் செய்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்