அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில் சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்சகாலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோரையும் அப்போது நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலை கள் கடலுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.
வயதில் பெரியவர்களுக்கும் கற்றறிந்த அறிஞர்களுக்கும் ஆடைகள், ஏழைகளு க்கு பசிக்கு உணவு படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்கள் ப்ரீதியடைந்து நம்மை நன்கு அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்காளிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.